சங்க இலக்கிய காதல் கதை - குறிஞ்சிக்கலி
சுடர்த் தொடா இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா..இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை,
அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
'உண்ணுநீர் ஊட்டிவா ' என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
தன்னைப் பறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்.
மிகவும் அருமையான் ஒரு சூழ்நிலை. தலைவி தன் தோழிக்கு, அவள் காதலன், தன் காதலை சொல்லிய விதத்தை சொல்லும்படி அமைந்த பாடல்.
காதலியும் காதலனும் சிரு வயது நன்பர்கள். சிரு வயது முதல் ஒன்றாக விலையாடி, தன் பருவ வயதில் அவள் மீது தலைவன் காதல் கொண்டான். நெடு நாட்களாக தன் காதலியை பிரிந்திருந்தான். இப்போது அவனுக்கு தன் மனதிற்குரியவளை சந்திக்கும் வாயிப்பு கிடைக்கிறது.
தன் காதலியை சந்திக்க அவள் வீடு நோக்கி வேகமாக நடக்கின்றான். தன் காதலை இன்று எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்புடன் செல்கிறான். ஆனால் அவனுக்குப் பெரிய ஏமாற்றம். புறத்தே தன் காதலியும் அவள் அன்னையும் இருப்பதை கான்கிறான்.
உடனே சூழலை புரிந்து கொண்டு "தாகமாக இருக்கிறது, தனிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்கிறான். அன்னையும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விடுகிறாள். ஓர் அழகிய பொற்குடத்தில் தலைவி நீர் தருகிறாள்.
தண்ணீரைப் பெருவது போல அவன் சட்டென்று அவளின் அழகிய வளை அணிந்த கரத்தைப் பற்றிவிடுகிறான் தலைவன். இதை எதிர்பாராத அவளோ, "அம்மா, இவன் செய்யும் காரியத்தை பார்" என்று அலறிவிடுகிறாள். உள்ளே இருந்து அம்மா அலறியடித்துக்கொண்டு ஓடி வருகிறாள்.
சட்டென்று தன் நிலையை அறிந்த தலைவி "தண்ணீர் பருகும் போது அவனுக்கு விக்கல் வந்துவிட்டது. அதான் உங்களை அழைட்த்தேன்" என்று கூறி உன்மை சம்பவத்தை மறைத்து விடுகிறாள்.இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா ? என்று கேட்டுக்கொண்டே விக்கலை நீக்க, தலைவனின் தலையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விடுகிறாள்.
அச்சமயத்தில் தலைவன் தன் கடைக்கண்ணால் தலைவியை நோக்கி புன்னகைகிறான். அவர்கள் கண்கள் அங்கே மணதைக் கொள்ளையடித்தன.
"இப்படிப் பட்ட கள்வன் என் காதலன்" என்று தோழிக்கு சொல்வதாக அமைந்த எட்டுத் தொகை நூலான கலித்தொகையில் கபிலர் இயற்றிய குறிஞ்சிக்கலி என்ற பகுதியில் அமையும் ஒரு பாடல்.
